மகர சங்கராந்தி பண்டிகை: கர்நாடக தலைவர்கள் வாழ்த்து

மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, கர்நாடக மக்களுக்கு ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, கர்நாடக மக்களுக்கு ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் மகர சங்கராந்தி பண்டிகை கோலாகலமாக திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு நன்றி செலுத்தும் இந்தப் பண்டிகையையொட்டி கர்நாடக மக்களுக்குத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் வஜுபாய் வாலா: இயற்கை வளம் நிறைந்த கர்நாடகத்தில் விவசாயிகள் செல்வச் செழிப்போடு வாழ வாழ்த்துகிறேன். சங்கராந்தி விழா கர்நாடக மக்களுக்கு அன்பு, செல்வம், மகிழ்ச்சி, அமைதியை வாரி வழங்கட்டும்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர்: அறுவடையின் மகிழ்ச்சியை வரவேற்கும் சங்கராந்தி திருநாளில் கர்நாடக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி பெருக வாழ்த்துகிறேன். மக்களின் வாழ்வில் வளம் பெருகி, நல்வாழ்வு கிடைக்க வாழ்த்துகிறேன்.
எதிர்க்கட்சித்தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர்: உழவர்களின் உழைப்பால் விளைந்த அறுவடையைக் கொண்டாடிமகிழும் மகர சங்கராந்தி பண்டிகையின் நல்வாழ்த்துகளை கர்நாடகமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
உழவுத் தொழிலில் இணைந்து உழைக்கும் சூரியன், இயற்கை, கால்நடைகளுக்கு நன்றி செலுத்த உழவர்கள் சங்கராந்தி பண்டிகையை கொண்டாடிவருகிறார்கள்.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்திருக்கிறோம் என்பதற்கு சான்றாக இன்றைக்கும்கடைபிடிக்கும் மிகச்சிறந்த பண்டிகையாகும். உற்சாகம், மகிழ்ச்சியை தங்கள் சொந்தங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக வீடுவீடாக சென்று எள் வார்க்கும், எள்ளும் வெல்லமும் வழங்கும் மரபு காலம்காலமாக பின்பற்றப்படுவது மனித உறவுகளை மேம்படுத்துவதற்காகும் என்பதை இந்த பண்டிகை நினைவூட்டிசெல்கிறது.
உறவுகளுக்கு இடையே அன்பை பரிமாறிக்கொள்வதன் மூலம் உறவை பலப்படுத்துவது மனிதச்சமூகத்தை சீரியவாழ்க்கைக்கு இட்டுச்செல்லும் நடைமுறையாகும். இது போன்றவிழாக்கள் தரும் நட்புறவு காலத்திற்கும் மறக்க இயலாத அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. மாநில மக்களின் வாழ்வில் குறிப்பாக விவசாயிகளின் குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கிபெருகட்டும் என்று விரும்புவதோடு, அனைவருக்கும் சங்கராந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்ற தலைவர்களின் வாழ்த்து: இதேபோல், மத்திய அமைச்சர்கள் சதானந்த கெளடா, அனந்த் குமார், முன்னாள் பிரதமர் தேவே கௌடா, சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, சட்ட மேலவைத்தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com