காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை வீசுகிறது: முரளிதர ராவ்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை உள்ளது என்று பாஜக தேசியப் பொதுச் செயலர் முரளிதரராவ் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை உள்ளது என்று பாஜக தேசியப் பொதுச் செயலர் முரளிதரராவ் தெரிவித்தார். பெங்களூரு பத்திரிக்கையாளர் சங்கம் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்,  அவர் பேசியது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசின் தோல்விகளால்,  அந்தக் கட்சிக்கு எதிரான அலை வீசிவருகிறது.  இதனால் பாஜக 150-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க உள்ளது.  இதனால் முதல்வர் சித்தராமையா அச்சம் கொண்டுள்ளார். எனவேதான் அவர் தனது 4 ஆண்டுகள் ஆட்சிக்குப் பின்னர் கன்னடம்,  மாநிலத்துக்கென்று தனியான கொடி, லிங்காயத்து பிரச்னை, மகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரங்களை மக்கள் முன் பேசி வந்தார். 
தற்போது பிரச்னைகளை முன் வைத்து வாக்கு கேட்டு வருகிறார். முதல்வர் சித்தராமையா எந்தப் பிரச்னையை முன் வைத்து பேசினாலும், தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. 
காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் தோல்வி அடைந்து வந்தாலும், எந்த பிரச்னைகளை முன் வைத்து தேர்தலைச் சந்திப்பது என்ற புரிதல் இல்லாமல் உள்ளது.  என்ன தந்திரத்தை முதல்வர் சித்தராமையா செய்தாலும், பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக விளங்கும்.  எடியூரப்பாவின் ஆட்சியில் விவசாயிகள் பயன்பெறுவார்கள். பாஜக ஆட்சியைப் பிடித்தால் காங்கிரஸ் ஆட்சியில் அதிகரித்துள்ள விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com