யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: முதல்வர் சித்தராமையா

ஜனநாயகத்தில் யாருக்கு வாக்களிப்பதுஎன்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

ஜனநாயகத்தில் யாருக்கு வாக்களிப்பதுஎன்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
ராமநகரம் தொகுதியில் தீவிரமாகப் பிரசார செய்தாலும் தன்னை தோற்கடிக்க முடியாது மஜத மாநிலத்தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். அவரது மனைவி அனிதா குமாரசாமி தேர்தலில் தோற்றபோது இந்த கருத்தை ஏன் குமாரசாமி கூறவில்லை. 
வாக்காளர்களின் வாக்குகள் குமாரசாமியின் சட்டைப் பையில் இருக்கிறதா என்ன? ஜனநாயகத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். இதுபோன்ற கருத்துகளை குமாரசாமி தெரிவித்துகொண்டிருக்கக் கூடாது.
சட்டப்பேரவைத் தேர்தலில், எனது (சித்தராமையா) அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமிட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் இருந்தே போட்டியிடப்போகிறேன் என்றுதான் கூறியிருந்தேன்.  பாதாமியில் இருந்து போட்டியிடுவதாக எங்கும் கூறவில்லையே.  இதுவரை ஒரு தொகுதியில் போட்டியிட்டிருக்கிறேனே தவிர, இரு தொகுதிகளில் போட்டியிட்டதில்லை. சாமுண்டீஸ்வரிதொகுதிமக்கள் என்னை ஆசிர்வதித்து, ஆதரிப்பார்கள். மோட்சமும் இங்கிருந்துதான் கிடைக்கவிருக்கிறது. 
கடந்த 3 நாள்களாக சாமுண்டீஸ்வரி தொகுதியில் குமாரசாமி தீவிரபிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.  நஞ்சன்கூடு இடைத்தேர்தலிலும் குமாரசாமி தீவிரமாக பிரசாரம் செய்தார். ஆனால், அங்கு காங்கிரஸ் வேட்பாளர்தான் வெற்றிபெற்றார். இந்த முறை சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.  வேட்புமனுவை ஏப்ரல் 20-ஆம் தேதிதாக்கல் செய்வேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com