கெளரி லங்கேஷ் கொலை வழக்கு:  பிரமோத் முத்தாலிக் பேச்சில் புது சர்ச்சை

கெளரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக,  ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ள கருத்து  புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கெளரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக,  ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ள கருத்து  புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீராமசேனேவின் விஜயபுரா மாவட்டத் தலைவர் ராகேஷ்மட்டிடம் சிறப்புப் புலனாய்வுப் படை(எஸ்.ஐ.டி.)  அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பரசுராம் வாக்மோரேவும்,   ஸ்ரீராமசேனை அமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கும் அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், பரசுராம்வாக்மோரே தங்கள் அமைப்பின் உறுப்பினராக இல்லை என்று விளக்கமளித்திருந்தார்.
இதனிடையே, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடையே பேசிய பிரமோத் முத்தாலிக், "கெளரிலங்கேஷை கொலை செய்ய சதிசெய்தது ஹிந்து அமைப்புகள்தான் என்று எல்லோரும் கூறுகிறார்கள். கர்நாடகத்தில் 2கொலைகள்(எம்.எம்.கலபுர்கி,  கெளரி லங்கேஷ்),  மகாராஷ்டிரத்தில் 2 கொலைகள் (கோவிந்த் பன்சாரே,  நரேந்திரத போல்கர்) நடந்தது காங்கிரஸ்  ஆட்சியில்தான்.  காங்கிரஸ் அரசின் தோல்வியை யாரும் கேள்விகேட்பதில்லை. ஆனால், இடதுசாரி அறிவுஜீவிகள், கெளரிலங்கேஷ் கொலை வழக்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசவேண்டும் என்று கேட்கிறார்கள். கர்நாடகத்தில் ஏதாவதொரு நாய் இறந்தால், பிரதமர் மோடி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கலாமா?" என்று
தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,  கெளரி லங்கேஷை நாயுடன் ஒப்பிட்டு பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ள கருத்து, புதிய சர்ச்சையை
கிளப்பியுளது. 
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி தனது சுட்டுரையில், "மூத்த பத்திரிகையாளர் கெளரிலங்கேஷை நாயுடன் ஒப்பிட்டுள்ளது அருவருப்பாக உள்ளது. 
இந்த கருத்துகளை பிரதமர் மோடி கண்டிப்பாரா? கெளரியை நாயுடன் ஒப்பிட்டுள்ளது அருவருப்பு மட்டுமல்ல வெறுக்கத்தக்கதாகவும், கொந்தளிக்கக்கூடியதாகவும் உள்ளன. கெளரிலங்கேஷ் கொலையை கண்டிக்கதவறிய பிரதமர் மோடி, இந்தக் கருத்தையும் மன்னிக்கப்போகிறீர்களா?" என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரமோத்முத்தாலிக், "கெளரிலங்கேஷை நாயுடன் ஒப்பிடவில்லை. கர்நாடகத்தில் நடக்கும் ஒவ்வொரு மரணத்திற்கும் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்க வேண்டுமா? என்பதே எனது கேள்வியாகும்." என்று விளக்கமளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com