நூலக அறிவியல் பயிற்சி முகாம்: ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் 4 மாதங்கள் அளிக்கப்படும் நூலக அறிவியல் பயிற்சி முகாமில் பங்கேற்க ஜூலை 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பொது நூலகத் துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் 4 மாதங்கள் அளிக்கப்படும் நூலக அறிவியல் பயிற்சி முகாமில் பங்கேற்க ஜூலை 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பொது நூலகத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுநூலகத்துறையின் சார்பில் கர்நாடகத்தின் 4 வருவாய் மண்டல தலைநகரங்களான பெங்களூரு, மங்களூரு, தார்வாட், கலபுர்கியில் 4 மாத காலத்துக்கு நூலக அறிவியல் பயிற்சிமுகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவீதம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் குறைந்தபட்சம்35 சதவீதம் மதிப்பெண் பெற்றிருப்போர் முகாமில் கலந்துகொள்ளலாம்.  முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளோரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தற்போது நூலகங்களில் உதவியாளர்களாக, ஊராட்சி நூலகங்களில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றுவோர் துறை உயரதிகாரிகளான உதவி இயக்குநர் அல்லது தலைமை நூலக அதிகாரி மூலம் விண்ணப்பங்களை அளிக்கலாம். விண்ணப்பங்களுடன் எஸ்எஸ்எல்சி தேர்வு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சேவைக்கு சேர்ந்த நாள், ஊதியவிவரங்கள், ஊரகப்பகுதி, நலிவுற்றோர், முன்னாள் ராணுவவீரர், மாற்றுத்திறனாளி, கன்னட பயிற்றுமொழி உறுதி சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகலை இணைக்க வேண்டும். இந்தமுகாமில் பங்கேற்க ஜூலை 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை செலுத்தவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு பெங்களூரு-080-22212128, தார்வாட்-0836-2442465, மங்களூரு-0824-2425873, கலபுர்கி-08472-221543 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com