"விரைவாக சிகிச்சை அளித்தால் உயிர் சேதத்தைத் தடுக்க முடியும்'

விரைவாக சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளின் உயிர் சேதத்தைத் தடுக்க முடியும் என்று எம்பைன் சுகாதார சேவை மையத்தின் தலைமை செயல் அதிகாரி பிரசாத் கொம்பல்லி தெரிவித்தார்.

விரைவாக சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளின் உயிர் சேதத்தைத் தடுக்க முடியும் என்று எம்பைன் சுகாதார சேவை மையத்தின் தலைமை செயல் அதிகாரி பிரசாத் கொம்பல்லி தெரிவித்தார்.
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக அளிப்பது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியது:-
பெங்களூரு போன்ற வளர்ச்சி அடைந்துள்ள மாநகரில்,  மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது இயலாத காரியமாகும்.
பல நேரங்களில் எந்த நோய்க்கு, எந்த மருத்துவரை அணுகுவது என்று உறவினர்கள் விழிப்புணர்வு இல்லாமல் தடுமாறுவதால்,  பல உயிர்களை இழக்க நேரிடுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிப்பதால் உயிர் சேதத்தை தடுக்க முடியும். 
இதுபோன்றவர்களுக்கு எண்ம திட்டத்தின் மூலம் உதவும் நடவடிக்கையில் எம்பைன் ஈடுபட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் இறுதிக்குள் 1 லட்சம் பேருக்கு சுகாதார சேவை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார் பிரசாத் கொம்பல்லி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com