ஜாதி, சமுதாயங்களை பிளவுபடுத்தும் எண்ணமில்லை: முதல்வர் சித்தராமையா

ஜாதி, சமுதாயங்களை பிளக்கும் எண்ணமில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

ஜாதி, சமுதாயங்களை பிளக்கும் எண்ணமில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூரில் செவ்வாய்க்கிழமை பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கிவைப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
வீரசைவ, லிங்காயத்து சமுதாயங்களை பிளக்க முயற்சிப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் என் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். எந்த ஜாதியையும், சமுதாயத்தை பிளக்கும் எண்ணமில்லை. சைவ, லிங்காயத்து சமுதாயம் வெவ்வேறானது என அறிவிக்கக் கோரி ஒருசமுதாயத்தினர் விடுத்த வேண்டுகோளின்படியே ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, நீதிபதி நாகமோகன்தாஸுக்கு உத்தரவிடப்பட்டது. 
அதைத் தொடர்ந்து அவர் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கை புதன்கிழமை கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மத்திய அரசின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம். இதனை மக்களவை உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விவசாயிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
போலீஸாரின் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க 6-ஆவது ஊதிய ஆணையம் அமைக்கப்பட்டது. இதனை மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com