"தொழில் துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு'

பெண்கள் தொழில் துறையில் முன்னேற்றமடைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளதாக வியு தொலைகாட்சியின் நிறுவனர் மற்றும் மூத்த செயல் அதிகாரி தேவிதா ஷரப் தெரிவித்தார்.

பெண்கள் தொழில் துறையில் முன்னேற்றமடைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளதாக வியு தொலைகாட்சியின் நிறுவனர் மற்றும் மூத்த செயல் அதிகாரி தேவிதா ஷரப் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நவீன தொழில்நுட்ப ஆன்ட்ராய்டு தொலைக்காட்சி பெட்டிகளை அறிமுகம் செய்து வைத்து பேசியது: சர்வதேச அளவில் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றது. செல்லிடப்பேசிகளில் புகுந்தப்பட்ட தொழில்நுட்பங்களை தற்போது, தொலைக்காட்சி பெட்டிகளிலும் புகுத்து வருகிறோம்
. இதன்மூலம் செல்லிடப்பேசி, கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்டவைகளை பெற்ற சேவையை இதன் மூலம் பெற முடியும். குரல் ஒலி மூலம் இந்த ரிமோட்டை இயக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். பணக்கார நாடான அமெரிக்காவில் மின் சாதனங்களில் விலை மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் வரி உள்ளிட்ட காரணங்களால் மின்சாதன பொருள்களின் விலை அதிகமாக உள்ளது. சரக்கு சேவை வரியை மத்திய அரசு குறைத்தால், மின் பொருள்களின் விலை அதிக அளவில் குறையும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் ஏழைகளையும் சென்றடையும்.
மேலும், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வியு தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கும் போது பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தேன். ஆனால், பிரச்னைகளிலிருந்து வெளியே வந்து வெற்றி அடைய முடிந்தது. அதே போல பிரச்னைகளை எதிர்கொண்டு, வாழ்க்கையில் வெற்றியடைய பெண்கள் முயல வேண்டும். அண்மைக்காலமாக பெண்கள் தொழில்முனைவோர்களாக உருவாவது அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னணியில் திகழ்வார்கள் என்று மாற்றுக் கருத்தில்லை என்றார். நிகழ்ச்சியில் பிளிப்கார்டின் துணைத் தலைவர் அஜய்யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com