மாநிலங்களவைத் தேர்தல்: 5 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 5 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 5 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை தேர்தல் அதிகாரியும், சட்டப்பேரவைச் செயலாளருமான எஸ்.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகளின் சார்பில் 5 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை மார்ச் 15-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம்.
மாநிலங்களவைத் தேர்தலில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு காங்கிரஸ் சார்பில் எல்.ஹனுமந்தையா, சையத் நசீர்ஹுசேன், சந்திரசேகர் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பாஜக சார்பில் ராஜீவ்சந்திரசேகர், மஜத சார்பில் ஃபாருக் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகித்த ராஜீவ்சந்திரசேகர், கே.ரகுமான்கான், ரங்கசாமி ராமகிருஷ்ணா, பசவராஜ்பாட்டீல் ஆகியோரின் பதவி காலம் ஏப். 2-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், மாநிலங்களவைத் தேர்தல் மார்ச் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com