அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவி: மைசூரு இளவரசர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான கல்வி உதவிகள் வழங்கப்படும் என மைசூரு உடையார் மன்னர் குடும்ப பட்டத்து இளவரசர் யதூவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான கல்வி உதவிகள் வழங்கப்படும் என மைசூரு உடையார் மன்னர் குடும்ப பட்டத்து இளவரசர் யதூவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.
பெங்களூரு பேட்டராயனபுராவில் உள்ள அரசுப் பள்ளியில் புதன்கிழமை மாதிரி நூலகத்தை திறந்துவைத்து குழந்தைகளுக்கு தனது மனைவி பட்டத்து இளவரசி திரிஷிகா குமாரியுடன் நூல்களை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியது: 
மாநில அளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். இதனால் அவர்கள் படித்த பின்னர் வேலைவாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே, அவர்களைக் கல்வியில் சிறக்க உதவ முடிவு செய்துள்ளேன். எனவே, கலிசு (கற்பித்தல்) அறக்கட்டளையுடன் இணைந்து, அரசுப் பள்ளிகளில் மாதிரி நூலகத்தைத் திறக்க முடிவு செய்துள்ளேன்.  நூலகத்தில் மாணவர்களின் கல்வியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் இடம்பெற்றிருக்கும். பெங்களூரில் முதல்முறையாக பேட்டராயனபுராவில் மாதிரி நூலகத்தைத் திறந்து வைத்துள்ளோம். ஏற்கெனவே மைசூரு, மண்டியாவில் 18 மாதிரி நூலகங்களைத் திறந்து வைத்துள்ளோம். நிகழாண்டின் இறுதிக்குள் மாநிலத்தில் பரவலாக 100 அரசு பள்ளிகளில் மாதிரி நூலகங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் கலிசு அறக்கட்டளையின் இணை நிறுவனர் விக்னேஷ், அதன் நிர்வாகி பிரகதி, அபிதா, மனோஜ், மிரா, சந்தியா, பள்ளியின் தலைமை ஆசிரியர் அஸ்வத்நாராயணா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com