தொழில் பயிற்சியில் சேர வாய்ப்பு

ராணுவ தொழில்பட்டறையில் காலியாகவுள்ள பயிற்சியாளர் பணியிடங்களில் சேர விரும்புவோர் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

ராணுவ தொழில்பட்டறையில் காலியாகவுள்ள பயிற்சியாளர் பணியிடங்களில் சேர விரும்புவோர் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
இதுகுறித்து பெங்களூரு 515 ராணுவ அடிப்படை தொழில்பட்டறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, அல்சூரில் உள்ள 515 ராணுவ அடிப்படை தொழில்பட்டறையில் காலியாக உள்ள டர்னர், மெஷினிஸ்ட், மெஷினிஸ்ட் கிரைன்டர், மெக்கானிக் மெஷின் டூல் பராமரிப்பு, டூல் அண்ட் டை, எலக்ட்ரிஷியன், ஷீட்மெட்டல் தொழிலாளி உள்ளிட்ட  பிரிவுகளில் காலியாகவுள்ள 78 பயிற்சியாளர் பணியிடங்கள் உள்ளன. 
இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 26-ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. தொழில்பயிற்சி மையத்தில் (ஐடிஐ) பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் இந்த நேர்காணலில் நேரடியாக கலந்துகொள்ளலாம். 
ஓராண்டுக்கு நடக்கவிருக்கும் இந்த பயிற்சியில் பங்கேற்போருக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும். நேர்காணலில் கலந்துகொள்வதற்கு பயணப்படி, தங்கும் வசதிப்படி அளிக்கப்படமாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com