ம.ஜ.த.- காங்கிரஸ் கூட்டணியானது: இடைத்தேர்தலில் பெற்றது வெற்றியல்ல

கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் ம.ஜ.த.- காங்கிரஸ் கூட்டணி பெற்றது

கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் ம.ஜ.த.- காங்கிரஸ் கூட்டணி பெற்றது வெற்றி அல்ல என்று பாஜக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
கலபுர்கியில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் ஏதோ சாதித்துவிட்டதாக  ம.ஜ.த.-காங்கிரஸ் கூட்டணியினர் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இடைத்தேர்தலில் ம.ஜ.த.-காங்கிரஸ் கூட்டணி பெற்றது வெற்றியல்ல. 5 தொகுதிகளில் பெல்லாரியை மட்டும்தான் பாஜக இழந்துள்ளது.  அதேபோல், காங்கிரஸ் ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியுள்ளது. இதற்கு, ஏதோ பிரதமர் பதவியை கைப்பற்றியதுபோல இரு கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 28 தொகுதிகளில் 25-இல் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.  மண்டியா தொகுதியில் பாஜகவின் பலம் கூடியிருக்கிறது. ராமநகரில் தவறான முடிவெடுத்ததால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 
ஜம்கண்டி, ராமநகரில் பாஜகவினர் சரியாகத் தேர்தல் பணியாற்றவில்லை. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இடைத்தேர்தலை கூட்டணி கட்சிகள் வென்றுள்ளன. எதிர்காலத்தில் இந்தக் கூட்டணிக்கு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
பாஜகவில் ஜனார்த்தன ரெட்டி கிடையாது: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி, பாஜகவை சேர்ந்தவர் அல்ல. அவரை பற்றி பேசுவதற்கு எதுவுமில்லை. இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக அவர் பணியாற்றவில்லை.  தேர்தல் நேரத்தில் அவர் பெல்லாரியில் இருக்கவே இல்லை. பாஜகவுக்கும் ஜனார்த்தன ரெட்டிக்கும் சம்பந்தமில்லை.
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடா தன்னை மண்ணின் மைந்தர் என்றும், முன்னாள் முதல்வர் சித்தராமையா தன்னை 'அஹிந்தா'(தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்)தலைவர் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். அப்படியானால், பாஜகவினர் திருடர்களின் குழந்தைகளா? என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com