இலக்கிய தரம் மிகுந்த படைப்புகளை உருவாக்க வேண்டுகோள்

இலக்கிய தரம்மிகுந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என கவான் இலக்கிய குழுவின் தென்னிந்திய தலைவர் ரானா தக்குபட்டி தெரிவித்தார்.

இலக்கிய தரம்மிகுந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என கவான் இலக்கிய குழுவின் தென்னிந்திய தலைவர் ரானா தக்குபட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தேசிய அளவில் தென்னிந்தியாவில் திரைப்படங்கள் பாமர மக்களை அதிகம் கவருகின்றன. ஆனால், எல்லா திரைப்படங்களும் தரமானவையாக இருப்பதில்லை. இதனால், பாமர மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை. 
எனவே, இலக்கிய தரமுள்ள படைப்புகளை உருவாக்குவதன் மக்களுக்கு நன்மை பயக்கும் என கருதுகிறோம். இதனைக் கருத்தில் கொண்டு, இலக்கிய தரமுள்ள கதைகளை எழுதும் எழுத்தாளர்கள், அந்த கதைகளை படமாக்கும் இயக்குநர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் தென்னிந்திய மொழிகளைச் சேர்ந்த தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளப் படைப்பாளிகள் பயனடைவார்கள். எந்த ஒரு துறையையும் நெறி படுத்துவது ஆரம்பக்கட்டத்தில் சற்று சிரமாக இருக்கும். யாராவது ஒருவர் முயற்சி எடுத்து செயல்படுத்தினால் மட்டுமே அது எதிர்காலத்தில் பலனளிக்கும். தென்னிந்தியாவில் நூல்கள் மட்டுமன்றி, திரைப்படங்களும் தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com