காஞ்சி சங்கர மடத்தில் நவராத்திரி விழா

பெங்களூரில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் அக்.13 முதல் 19-ஆம் தேதி வரை நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது.

பெங்களூரில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் அக்.13 முதல் 19-ஆம் தேதி வரை நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரில் உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடிபீடம் வெளியிட்ட அறிக்கை:
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில் பெங்களூரு மல்லேஸ்வரம் 11-ஆவது குறுக்குத்தெருவில் ஸ்ரீகாஞ்சி மகாசுவாமி சந்திரசேகர சரஸ்வதி சாலையில் உள்ள ஸ்ரீகாஞ்சி சங்கரமடத்தில் அக்.19-ஆம் தேதி வரை 84-ஆவது அவதார மகோத்ஸவம் மற்றும் நவராத்திரி உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை காமாட்சி அம்மனுக்கு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், இரவு 7.30மணி முதல் இரவு 8 மணி வரை ஷோதோபச்சார பூஜை, தீபாராதனை நடக்கவிருக்கிறது. மாலை 5.30 மணி முதல் மாலை 6.15 மணி வரை சனாதன தர்மம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடகுரு பரம்பரை மற்றும் குருமகிமை குறித்து சத்தியவாகீஸ்வர கணபதிகள் பிரவசனம் அளிக்கிறார். 
அக்.13 முதல் 19-ஆம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9மணிவரை அபிஷேக் ரகுராம், சுதாரகுநாதன், திரிச்சூர் வி.ராமசந்திரன், பட்டாபிராம் பண்டித் ஆகியோர் வாய்ப்பாட்டு, யூ.ராஜேஷின் மாண்டலின், டாக்டர் எல்.சுப்ரமணியம், அம்பி சுப்ரமணியத்தின் வயலின், சிக்கில் மாலா சந்திரசேகரின் புல்லாங்குழல் இசை கச்சேரி நடக்கவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீஜெயேந்திரசரஸ்வதி சுவாமிஜி பவள விழா அறக்கட்டளை செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 9880766001 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com