கெம்பே கெளடா விருது பெற்ற தமிழர்களுக்கு பாராட்டு

பெங்களூரு மாநகராட்சியின் கெம்பே கெளடா விருது பெற்ற தமிழர்களுக்கு உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை பாராட்டி கெளரவித்தது.

பெங்களூரு மாநகராட்சியின் கெம்பே கெளடா விருது பெற்ற தமிழர்களுக்கு உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை பாராட்டி கெளரவித்தது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை உரிமைக்குரல் பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளையின் மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் ரவி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அறக்கட்டளை செயலாளர் டி.எஸ்.கிருஷ்ணன், துணைத் தலைவர் ஜெயகாந்தன், பொருளாளர் வா.கோபி, ஆலோசகர் வா.ஸ்ரீதரன், செயற்குழு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில், பெங்களூரு மாநகராட்சி சார்பில் கெம்பே கெளடா விருதுவழங்கி கெளரவிக்கப்பட்ட தமிழர்களான ஆல்ப்ரெட், செங்குட்டுவன், வெங்கடேஷ், தினகரவேல், மாரிக்குமார், சம்பத் ஆகியோரை உரிமைக்குரல் பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் ரவி, ஆலோசகர் வா.ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பாராட்டி கெளரவித்தனர். சங்கத்தின் சார்பில் விருது பெற்றோருக்கு நினைவுபரிசு, சால்வை, பழக்கூடை அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
விழாவில் பேசிய எம்ஜிஆர் ரவி, "பெங்களூரு மாநகராட்சி வழங்கிய கெம்பே கெளடா விருதுக்கு தமிழர்களான ஆல்ப்ரெட், செங்குட்டுவன், வெங்கடேஷ், தினகரவேல், மாரிக்குமார், சம்பத் ஆகியோரை தேர்ந்தெடுத்தது உள்ளபடியே பெருமிதப்படக்கூடியதாகும். இதற்காக, பெங்களூரு மாநகராட்சி மேயரான தமிழர் ஆர்.சம்பத்ராஜை மனதார நன்றியோடு நினைத்து பார்க்கிறோம். பெங்களூரை கட்டமைத்த தமிழர்களை ஊக்குவிக்க வழங்கப்பட்டுள்ள விருது, அவர்களின் பணியைமென்மேலும் செம்மையாக்கும். எம்ஜிஆரின் வழியில் தொண்டு செய்யும் நல்ல உள்ளங்களை தொடர்ந்து பாராட்டி மகிழ்வோம்' என்றார்.
முன்னதாக, விருது பெற்றவர்கள் சங்கத்தில் இருந்த எம்ஜிஆர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com