ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாத அரசு மருத்துவமனை: நோயாளிகள் பரிதவிப்பு

கோலார் தங்கவயலில் உள்ள அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால், நோயாளிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோலார் தங்கவயலில் உள்ள அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால், நோயாளிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல், ராபர்ட்சன்பேட்டையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு கோலார் தங்கவயல், அதன் சுற்று வட்டத்திலுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். போக்குவரத்து வசதி இல்லாமல் தொலைவில் தவிக்கும் நோயாளிகளை அழைத்து வர 108 ஆம்புலன்ஸ் வாகனம் இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வந்தது.  இம்மருத்துவமனையில் பல ஆண்டுகளாகவே போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை இங்கிருந்து கோலார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. 
இந்த நிலையில், கடந்தாண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் பழுதடைந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வாகன சேவை மாற்று ஏற்பாடு எதுவுமில்லாமல் நிறுத்தப்பட்டது. ஓராண்டு கடந்தும் ஆம்புலன்ஸ் வாகனம் சீர் செய்யப்படாததால், பேத்தமங்கலம், காமசமுத்திரம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தை நெருக்கடி நேரங்களில் கேட்டு பெறும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையை மாற்றி, பழுதடைந்துள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தை உடனடியாக சீர்படுத்தி, மீண்டும் 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடங்க வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com