சிவமொக்காவில் நாளை தமிழ்ச் சங்கப் பேரவை செயற்குழுக் கூட்டம்

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் மு.மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின்  செயற்குழு மற்றும் பொதுக்குழு சிவமொக்காவில் சோமினகொப்பா சாலையில் உள்ள தமிழ்த்தாய் சங்கக் கட்டடத்தில் செப்.16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)பேரவைத் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம் தலைமையில்
நடக்கவிருக்கிறது. 
காலை 10.30 மணிக்கு செயற்குழுவும், பிற்பகல் 2 மணிக்கு பொதுக்குழுவும் கூடுகிறது. இக்கூட்டங்களில் 2017-18 வரவு செலவு அறிக்கை, எதிர்காலத் திட்டங்கள், புதிய உறுப்பு அமைப்புகள் சேர்க்கை, மாநாடு, கருத்தரங்கு நடத்துதல் - அதற்காக குழுக்கள் அமைத்தல், மலர் வெளியீடு - அதற்காக குழுக்கள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9986021869, 9810271676, 9495312473, 9791659770, 94480 54831 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு
பெங்களூரு, செப். 14: பெங்களூரில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாந்திநகர், ராஜாஜிநகர், மல்லேஸ்வரம், பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆர் லேஅவுட், மெஜஸ்டிக், காந்திநகர், மடிவாளா, மகாலட்சுமிலேஅவுட், கோரமங்களா, வில்சன்கார்டன், மாகடிசாலை, பசவவேஸ்வரநகர், எச்.ஏ.எல் சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.
பெங்களூரில் 2  மணி நேரம் பலத்த மழை தொடர்ந்து பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வேலைமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் இன்னலுக்கு உள்ளானார்கள். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால், அதனை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து தடைபட்டது. பெரும்பாலான சாலைகளில் சாரைசாரையாக வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது. இதனால் வீடுகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com