பெங்களூரில் இன்று இலக்கியத்தேன் சாரல் நிகழ்ச்சி

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை இலக்கியத்தேன் சாரல் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை இலக்கியத்தேன் சாரல் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து இலக்கியத்தேன் சாரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
இலக்கியத்தேன் சாரல் அமைப்பு சார்பில் பெங்களூரு அல்சூரில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை(செப்.15)மாலை 3 மணிக்கு இலக்கியத்தேன் சாரல் நிகழ்வு நடக்கவிருக்கிறது. சி.ஹரீஷ் சின்னராஜன் வரவேற்க, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வ.மலர்மன்னன் "கலைஞருக்குப் புகழஞ்சலி' என்ற கவிதையை வாசிக்கிறார். இதைத் தொடர்ந்து, நினைவில் நிற்பவர்கள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கவிருக்கிறது. இக்கவியரங்கத்தில் பெரியார் என்ற தலைப்பில் அமுதபாண்டியன், வ.உ.சி. என்றதலைப்பில் கல்யாண்குமார், பாரதியார் என்ற தலைப்பில் விமலா, திரு.வி.க.என்றதலைப்பில் மதலைமணி, அண்ணா என்ற தலைப்பில் தேன்மொழியன் கவிதை பாடுகிறார்கள். 
அடுத்ததாக, மாணவர்களின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் வழிகாட்டுவது என்ற தலைப்பில் 
கே.ஜி.ராஜேந்திர பாபுவை நடுவராக கொண்டு பட்டிமன்றம் நடக்கவிருக்கிறது. இதில் ஆசிரியர்களே என்ற அணியில் ஜெய்சக்தி, தென்னவன், ஆர்.ஜோதி, பெற்றோர்களே என்ற அணியில் மு.குமார், தனம் வேளாங்கண்ணி, சி.ஹரீஷ் சென்னராஜன் ஆகியோர் வாதிடுகிறார்கள். 
நிறைவாக, தேன்மொழியன் நன்றி கூறுகிறார். இதில் அனைவரும் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com