ஆதார் வீட்டுவசதி நிதிநிறுவன பங்குகள்: செப். 28-ஆம் தேதி வரை பெறலாம்

ஆதார் வீட்டுவசதி நிதி நிறுவனத்தின் பங்குகளை செப். 28-ஆம் தேதி வரை பொதுமக்கள் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஆதார் வீட்டுவசதி நிதி நிறுவனத்தின் பங்குகளை செப். 28-ஆம் தேதி வரை பொதுமக்கள் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை ஆதார் வீட்டுவசதி நிதி நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும், மூத்த செயல் அதிகாரியுமான தியோ சங்கர் திருபாதி செய்தியாளர்களிடம் கூறியது: எங்கள் நிறுவனத்தின் சார்பில் செப். 14-ஆம் தேதி முதல் ரூ.1,000 முகமதிப்புள்ள பங்குகளை வெளியிட்டுள்ளோம். இதன்மூலம் ரூ.1,400 ஆயிரம் கோடி மூலதனத்தை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். பொதுமக்கள் குறைந்தது 10 பங்குகள் அல்லது அதன் பெருக்கல் தொகையில் வாங்க வேண்டும். பங்குகள் மூலம் திரட்டப்படும் மூலதனத்தில் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் வீடுகள், கட்டடங்கள் கட்ட கடன் வழங்க முடிவு செய்துள்ளோம். செப். 28-ஆம் தேதி வரை பங்குகளை பொதுமக்கள் பெறலாம். பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு சிறந்தது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com