நீதிமன்றங்களில் கன்னடத்தை கட்டாயமாக்க வேண்டும்'

கர்நாடக நீதிமன்றங்களில் கன்னடம் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வலியுறுத்தி செப். 22-ஆம் தேதி கன்னட செலுவளி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வாட்டாள் நாகர

கர்நாடக நீதிமன்றங்களில் கன்னடம் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வலியுறுத்தி செப். 22-ஆம் தேதி கன்னட செலுவளி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் அனைத்துத் துறைகளிலும் கன்னட மொழியை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளாக உள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் கன்னட மொழியின் பயன்பாட்டை விட ஆங்கில மொழியின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. ஆங்கில மொழியின் பயன்பாட்டை தடுத்து நிறுத்துவதோடு, கன்னட மொழியின் பயன்பாட்டை கட்டாயமாக்க வலியுறுத்தி, செப். 22-ஆம் தேதி பெங்களூரு மைசூரு வங்கி சதுக்கத்தில் போராட்டம் நடத்த கன்னட செலுவளி கட்சி முடிவு செய்துள்ளது. உயர் நீதிமன்ற உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதியரசர்கள் மட்டுமின்றி வழக்குரைஞர்களும் கன்னடத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் பொதுமக்களுக்கு வாதங்களை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com