சாம்சங் கேலக்ஸி ஏ 7 செல்லிடப்பேசி அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ 7 செல்லிடப்பேசி பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ 7 செல்லிடப்பேசி பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ 7 செல்லிடப்பேசியை அறிமுகம் செய்து வைத்து அந்நிறுவனத்தின் பொது மேலாளர் ஆதித்யபாபர் பேசியது: அனைத்து பொருள்களையும் இந்தியாவில் தயாரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரின் விருப்பத்தை ஏற்று இந்தியாவில் தில்லிக்கு அருகே நொய்டாவில் சாம்சங் கேலக்ஸி ஏ 7 செல்லிடப்பேசியை தயாரித்துள்ளோம். அதனை பெங்களூரில் அறிமுகம் செய்வதை பெருமையாக கருதுகிறோம். அகல தொடுதிரையுடன், விரைவாக சார்ஜ் ஆகும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த செல்லிடப்பேசி, நேரடியாக ஒளிபரப்பப்படும் காட்சிகளை காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 24 எம்.பி. கேமரா, பின்பக்கம் தலா 8 எம்.பி. வசதி கொண்ட அல்ட்ரா வைடு கேமராக்கள் 3 உள்ளன. 4 ஜிபி ரேம், 32, 128 ஜிபி மெமரி கார்டுகள் வசதிகளை உள்ளடக்கியுள்ளது.  இதன் இந்திய விலை ரூ.23,990 முதல் ரூ.28,990 வரை உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com