'சீன பட்டாசுகள் வேண்டாம்'

சிவகாசி பட்டாசுகள் இருக்க சீன பட்டாசுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கேட்டுக் கொண்டார்.
'சீன பட்டாசுகள் வேண்டாம்'

சிவகாசி பட்டாசுகள் இருக்க சீன பட்டாசுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கேட்டுக் கொண்டார்.

 சென்னை தீவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு பஜாரில் விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாவட்ட பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி ஆர்.அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் பட்டாசு விற்பனையைத் தொடக்கிவைத்து பேசியதாவது:

இங்கு அமைக்கப்பட்டுள்ள பட்டாசு பஜாரில் தரமான பட்டாசுகளே விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் சிவகாசியில் தயார் செய்யப்பட்ட பட்டாசுகளே தரமானதாகும். எனவே, சீன பட்டாசுகளை வாங்கி யாரும் ஏமாற வேண்டாம்.

 காலை 10 மணி முதல்...: சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் நடைபெறும். மேலும், பட்டாசுகள் வாங்க வருகிறவர்களுக்கு வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இந்த நிகழ்ச்சியில், திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன், நகைச்சுவை நடிகர்கள் சின்னி ஜெயந்த், கணேஷ்கர் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
 இதில் தீபாவளி முன்னோட்ட நிகழ்ச்சியாக வசந்தம் மனவளர்ச்சி குன்றிய பயிற்சி மாணவர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு பண்டல்களையும் வழங்கினர். பின்னர் நடிகர் சின்னி ஜெயந்த், கணேஷ்கர் உள்ளிட்டோர் இணைந்து வழங்கிய பல்சுவை கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை துணைச் செயலாளர்கள் முஜ்பூர் ரகுமான், ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com