வங்கிக் கிளைகளில் தொடரும் நெரிசல்: ரிசர்வ் வங்கியிலும் சில்லறை நாணயங்களே விநியோகம்

வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதற்காக பொது மக்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
வங்கிக் கிளைகளில் தொடரும் நெரிசல்: ரிசர்வ் வங்கியிலும் சில்லறை நாணயங்களே விநியோகம்

வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதற்காக பொது மக்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
அனைத்து வங்கிகளுக்கும் பணத்தை விநியோகிக்கும் ரிசர்வ் வங்கியிலும் கூட சில்லறை நாணயங்களே அளிக்கப்படுகின்றன. இதனால், வங்கிக் கிளைகளில் இருந்து பணத்தை எடுக்கவும், சில்லறைக்காகவும் பொது மக்கள் தொடர்ந்து அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதேநிலை சனிக்கிழமையும் நீடித்தது.
காலையில் வங்கிக் கிளைகள் தொடங்குவதற்கு முன்பே வழக்கம் போல் அனைத்துக் கிளைகளிலும் நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு முதலில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் வரிசையாக உள்ளே அனுப்பப்பட்டனர்.
ரொக்கத்தில் கட்டுப்பாடு: அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரொக்கத்தில் கட்டுப்பாடு வைத்தே விநியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் 6 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டது. இதே நிலை சனிக்கிழமையும் நீடித்தது.
இதனால், மாத ஊதியத்தை முழுமையாக எடுப்பதில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியும் சில்லறை விநியோகம்: அனைத்து வங்கிகளுக்கும் பணம் விநியோகிக்கும் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து நாணயங்களையே அளிக்கிறது. செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுவதும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறையும் ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
இந்த சில்லறையானது நாணயங்களாகவே கொடுக்கப்படுகிறது. கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு நாணய மூட்டைகளை ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்துள்ளது. ரூபாய் நோட்டுகளாக விநியோகிக்காமல் தொடர்ந்து நாணயங்களாகவே அளிக்கப்படுவதால் பொது மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com