டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள்

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை சார்பாக, தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு முகாம்கள் பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள்

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை சார்பாக, தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு முகாம்கள் பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்தும், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கும் படத்துடன் கூடிய 12 லட்சத்திற்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


இந்தாண்டு தொடக்கம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையினரால் சென்னை மாநகர் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், 1 முதல் 15 மண்டலங்களில், 270 பேருந்துகளின் பின்பகுதியில் டெங்கு விழிப்புணர்வு குறித்த விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து 30 நாட்களுக்கு விழிப்புணர்வு விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது.

இதுதவிர, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு அளிப்பதில் ஒரு பகுதியாக டெங்கு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் குறுஞ்செய்திகள் வாயிலாக சென்னை மாநகரில் உள்ள 70 லட்சம் செல்லிடப்பேசிகளுக்கு அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை பெருநகர சென்னை மாநகராட்சி "தீ கேன்டில்ஸ்' என்ற அரசு சாரா அமைப்புடன் இணைந்து சென்னை-வேப்பேரியில் உள்ள பென்டிங் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் "வீ எலிமினேட் மஸ்கிடோஸ்' என்ற வாசகத்துடன் மாணவியர்களை ஒருங்கிணைத்து டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுப்புழு மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள், அதனைத் தடுக்கும் முறைகள் குறித்து மாணவியர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் மாணவியர் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் தூய்மை இந்தியா உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது. இதில் சுமார் 1530 மாணவிகள் கலந்து கொண்டனர். மாநகராட்சி பணியாளர் ஒருவர் டெங்கு கொசு வேடமிட்ட பள்ளி மற்றும் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதில், பள்ளியின் தலைமை ஆசிரியை, சுகாதார ஆய்வாளர், ஆசிரியர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com