8 இடங்களில் காற்றுமாசு கண்காணிப்பு கருவிகள்

சென்னையில் கத்திவாக்கம், மணலி, திருவொற்றியூர், கீழ்ப்பாக்கம், தியாகராய நகர், வள்ளலார் நகர், அண்ணா நகர், அடையாறு ஆகிய 8 இடங்களில்
8 இடங்களில் காற்றுமாசு கண்காணிப்பு கருவிகள்

சென்னையில் கத்திவாக்கம், மணலி, திருவொற்றியூர், கீழ்ப்பாக்கம், தியாகராய நகர், வள்ளலார் நகர், அண்ணா நகர், அடையாறு ஆகிய 8 இடங்களில் புதிதாக காற்று மாசு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், தேசிய காற்று தர கண்காணிப்புத் திட்டத்தில் மேற்கண்ட பகுதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, சென்னையில் அண்ணா சாலை, கிண்டி, நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் காற்று மாசு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இனி, மற்ற இடங்களிலும் காற்றுமாசு குறித்த அளவு சோதனைச் செய்யப்படும். இதில் கத்திவாக்கம், மணலி, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் இருப்பதால் காற்றின் மாசளவை கண்டறிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், கீழ்ப்பாக்கம், தியாகராயநகர், வள்ளலார் நகர் ஆகியவை வியாபாரம் அதிகமுள்ள பகுதி என்பதாலும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
அண்ணாநகர், அடையாறு இடங்கள் குடியிருப்புகள் அதிகமிருக்கும் பகுதி என்றாலும் அதிகளவில் மக்கள் தொகை இருப்பதால் காற்று மாசு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மாசளவு எவ்வளவு? இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் சல்பர் டை ஆக்சைட் 50 மைக்ரோ கிராமாகவும், நைட்ரோஜன் டை ஆக்சைட் 40 மைக்ரோ கிராமாகவும் இருக்க வேண்டும். இதுதான் அந்தப் பகுதியில் சுத்தமான காற்று உள்ளதற்கான அளவு என தேசிய காற்று தர கண்காணிப்பு திட்டம் தெரிவிக்கிறது. இதற்கு மேல் இருந்தால் அப்பகுதிகளில் காற்று மாசடைந்துள்ளது என அர்த்தமாகும்.
இந்தக் கருவிகள் 24 மணி நேரமும் காற்றின் மாசு அளவைக் கண்காணிக்கும். மேலும், வாரம் இருமுறை காற்று மாசு குறித்து தகவல்கள் இந்தக் கருவிகளில் இருந்து பெறப்படும். மேலும், காற்றில் மிதக்கூடிய மின் துகள்கள் 10 மைக்ரோ கிராம் குறைவவாக எப்போதும் இருக்க வேண்டும்.
பட்டாசு மாசு: தீபாவளியின்போது, பெரு நகரங்களில் காற்றின் மாசு பொதுவாகவே அதிகரிக்கும். கடந்தாண்டு நவம்பரில் மழை பெய்ததால் சென்னையில் தீபாவளி மாசு குறைந்து காணப்பட்டது. ஆனால், 2014 ஆம் ஆண்டு சென்னையில் காற்றுமாசு அதிகமிருந்தது.
பட்டாசுகளால் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு நாளிலும், தீபாவளி பண்டிகை அன்றும் ஆய்வு செய்யப்பட்டு இரண்டும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.
ஆய்வுக்கான இடங்கள்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வு சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், செளகார்பேட்டை, கிண்டி ஆகிய இடங்களிலும், மதுரை, சேலம், கோவை, திருச்சி, கடலூர், நெல்லை, ஒசூர், திருப்பூர், வேலூர், திண்டுக்கல் ஆகிய தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஆய்வுகள் செய்யப்படும். தீபாவளியின்போது காலை முதல் இரவு வரை காற்று, ஒலி மாசுவின் அளவுகள் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
என்ன பாதிப்பு?
இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
சாதாரணமாக மனிதன் சுவாசிக்கும்போது நுண் துகள்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். தீபாவளியின்போது ஆய்வு செய்யப்படும். அந்த நுண்துகள்கள் குறிப்பிட்ட அளவைவிட அதிகமிருக்கக் கூடாது. மிதக்கும் நுண்துகள்கள் என்பவை தூசுகள்தான். அவற்றில் வேதிப் பொருள்கள் ஏதும் கலந்திருக்காது. ஆனாலும் அவற்றை நாம் சுவாசிக்கும்போது நமது நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com