புத்தாடைகள் வாங்க கூட்டம்...!

தீபாவளிக்காக, புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க தியாகராய நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் கூட்டம் அலைமோதியது.
புத்தாடைகள் வாங்க கூட்டம்...!

தீபாவளிக்காக, புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க தியாகராய நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் கூட்டம் அலைமோதியது.
இங்குள்ள பிரசித்தி பெற்ற ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், சாலையோர ஆயத்த ஆடைகள் விற்பனையகங்களில் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும், பல்வேறு பிரசித்தி பெற்ற இனிப்பகங்களிலும் பலகாரங்கள் விற்பனையும், பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.
ஆயத்த ஆடைகளில் பல புதிய ரங்களிலும், பல்வேறு வண்ணங்களில் ஜவுளிகள் நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு அதிக அளவில் வரவேற்பு இருந்தது.
இதுகுறித்து சிலரிடம் கருத்துகளைக் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
கல்லூரி மாணவி சந்திரா: தீபாவளிக்கு நிறைய ஆயத்த ஆடைகளும், துணி வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இளம்பெண்களுக்கான நெட்டிங் சுடிதார், த்ரி போர்த் சுடிதார், தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தும் இயற்கை சாய நவீன ரக காட்டன் சேலைகள், பூ வேலைப்பாடுகள் நிறைந்த சாஃப்ட்சில்க் விபன்ஜி, ஜமாலி சேலைகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிலும், நெட்டிங் சுடிதார் என்பது உள்தோற்றம் துணியாகவும், அதன் வெளித்தோற்றம் வலைபோல் பல்வேறு வண்ணங்களில் மின்னும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த வகை சுடிதார் குறைந்தது ரூ.1,500 முதல், 5 ஆயிரம் வரையில் உள்ளது.
பிரபல ஜவுளிக் கடை மேலாளர் நம்பிராஜன்: புதிய துணி ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கைவேலைப்பாடுகள் நிறைந்த சாஃப்ட், விபன்ஜி சில்க் சேலைகள், சிறுவர், சிறுமிகளுக்கான குழந்தைகளுக்கான கேட்ஸ், கேப் டாப் சோலி, ரிங் பிராக் வகை ஆடைகள், இளம் பெண்களுக்கு பார்டிவேர், பார் பி சல்வார், ஓலிவியா டிரன்டி டாப்ஸ், ஏஞ்சலினா ஃபேன்சி லெக்கிங்ஸ், இளைஞர்களுக்கு விட்டோமைன், பல்வேறு வணணங்களில் கைவேலைப்பாடு நிறைந்த ஆடைகள், ஆயத்தை ஆடைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதை அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com