107 அம்மா உணவகங்கள் திறப்பு

சென்னை மாநகரில் புதிதாக ரூ.18.99 கோடியில் கட்டப்பட்ட 107 அம்மா உணவகங்கள் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
அம்மா உணவகத்தை திறந்து வைத்து உணவை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. உடன், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன்.
அம்மா உணவகத்தை திறந்து வைத்து உணவை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. உடன், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன்.

சென்னை மாநகரில் புதிதாக ரூ.18.99 கோடியில் கட்டப்பட்ட 107 அம்மா உணவகங்கள் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், அம்மா உணவகங்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டிஜெயக்குமார், ஆணையாளர் தா.கார்த்திகேயன், எம்எல்ஏக்கள் பி.வெற்றிவேல், ஆர்.நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஏழைகள் சுகாதாரமான, தரமான உணவு வகைகளை மலிவு விலையில் பெற்று பயனடையும் வகையில், சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களுக்கு தலா ஒன்று வீதம் 15 அம்மா உணவகங்களை 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-இல் முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
இதையடுத்து, 200 கோட்டங்களில் 293 அம்மா உணவகங்ளும், 7 அரசு மருத்துவமனைகளிலும் தலா ஒன்று விதம் 7 அம்மா உணவகங்கள் என மொத்தம் 300 அம்மா உணவகங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, நகராட்சிகளிலும் அம்மா உணவங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் இதுவரை அம்மா உணவகங்களின் மூலம் 33.60 கோடி இட்லிகளும், 13.9 கோடி கலவைச் சாதங்களும், 17.38 கோடி சப்பாத்திகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com