கொரட்டூரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவு நீர்: சுகாதார சீர்கேடு ஏற்படும்அபாயம்

சென்னை கொரட்டூர் பகுதியில் குடியிருப்புகளை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொரட்டூரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவு நீர்: சுகாதார சீர்கேடு ஏற்படும்அபாயம்

சென்னை கொரட்டூர் பகுதியில் குடியிருப்புகளை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனய இந்தப் பணியின் தொடர்ச்சியாக கொரட்டூர் ஏரிக்கரை கால்வாய், கிழக்கு நிழற்சாலை, வடக்கு நிழற்சாலை, ஏரிக்கரைச் சாலை, மத்திய நிழற்சாலை, 35,38 ஆவது தெருக்கள் ஆகிய இடங்களில் உள்ள சாலையோரங்களிலும், தெருக்களிலும் கழிவு நீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வீடுகளை சூழ்ந்த கழிவு நீர்: இப்பணிக்காக கழிவு நீர் பாதை அடைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியின் பல இடங்களில் கழிவு நீர் குளமாக தேங்கி உள்ளது. மாற்று வழியை ஏற்படுத்தாமல் கால்வாய்கள் சீரமைக்கப்படுவதால் ஏற்கெனவே வந்து கொண்டிருந்த கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் அங்காங்கே தேங்கியுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புரளை கழிவு நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகளிலும், தெருக்களிலும் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாக மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் அப்பகுதிகளிவ் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக என அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சுகாதாரக் கேடு: இதுகுறித்து ஏரிக்கரைச் சாலையில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறியதாவது:

இப்பகுதியில் கழிவு நீர் செல்வதற்கு வழியில்லாமல் கொரட்டூர் ஏரிக்கரை கால்வாய் பகுதியை அடைத்துள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரால் ஏரி நிரம்பி, தாழ்வான பகுதியில் சிறிய அளவிலான கால்வாய் வழியாக குடியிருப்புகளை கழிவு நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீட்டில் யாரும் குடியிருக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் இரவும், பகலும் கொசுக்கடியால் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படும் நிலையுள்ளது. அதனால் கொரட்டூர் ஏரி நீரை திறந்து விடுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ஆனால், அதற்கு தலைமைச் செயலாளர் அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர் என்றார் அவர்.

மாநகராட்சி மண்டல அதிகாரி கூறியபோது, "இப்பகுதியில் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களையும், பொதுமக்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளோம். குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க, மாற்று வழியில் கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com