ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம்

ஆர்.கே.நகரில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் நியாயமான முறையில் தேர்தலை நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது என இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்காவுக்கு தேர்தல் நடவடிக்கைகளை விளக்கும் தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரவீண் பிரகாஷ். உடன் (இடமிருந்து) மத்திய தேர்தல்
ஆர்.கே.நகரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்காவுக்கு தேர்தல் நடவடிக்கைகளை விளக்கும் தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரவீண் பிரகாஷ். உடன் (இடமிருந்து) மத்திய தேர்தல்

ஆர்.கே.நகரில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் நியாயமான முறையில் தேர்தலை நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது என இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தெரிவித்துள்ளார். மேலும் வாக்களிப்பதற்காக பணமோ அல்லது பரிசுப் பொருள்களையோ பெற வேண்டாம் என வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, தேர்தல் பார்வையாளர் திலிப் சர்மா, ஆணைய இயக்குநர் திரேந்திர சர்மா ஆகியோர் வெள்ளிக்கிழமை தொகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின்னர், உமேஷ் சின்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முறைகேடில்லாமல் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதே நேரம் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்கள் வாக்குகளை அளிப்பதற்காக பணம், பரிசு பொருள்களை வாக்காளர்கள் வாங்க வேண்டாம்.
மத்திய பாதுகாப்புப் படை வருகை: ஆர்.கே.நகரில் சுமார் 50 இடங்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக அறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். இதற்கு வசதியாக மத்திய பாதுகாப்புப் படையினர் விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள். தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து அம்சங்களையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. தவறிழைக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு வேட்பாளரும் மற்றொரு வேட்பாளருக்கு சாதமாகவோ, மறைமுக உதவிகளைச் செய்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பணப்புழக்கம் கண்காணிக்கப்படும்: தொகுதி முழுவதும் வணிக நிறுவனங்கள், மளிகைக்கடைகள், மதுபானக் கடைகளில் மொத்தமாக யாருக்கேனும் பொருள்கள் விற்கப்படுகின்றனவா என கண்காணிக்கப்படும். மேலும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, மத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் விமான நிலையம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் என்றார் சின்கா.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com