பார்க்கிங் வசதி இல்லா உணவகங்களை மூடும் உத்தரவில் தளர்வு!

வாகன நிறுத்த வசதி இல்லாத உணவகங்களை மூட வேண்டும் என்ற உத்தரவைத் தளர்த்திய சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பார்க்கிங் வசதி இல்லா உணவகங்களை மூடும் உத்தரவில் தளர்வு!

வாகன நிறுத்த வசதி இல்லாத உணவகங்களை மூட வேண்டும் என்ற உத்தரவைத் தளர்த்திய சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
சென்னை மாநகரில் உள்ள ஏராளமான உணவகங்களில் வாகனங்களை நிறுத்த இட வசதிகள் இல்லை. வாடிக்கையாளர்களின் கார்கள், பொது சாலையை மறித்து வெளியே நிறுத்தப்படுகின்றன. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டுத் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த லோகு என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாகனங்கள் நிறுத்த வசதியில்லாத 25 உணவகங்களை மூடுமாறு, பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் எம்.ரவி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வாகன வசதியில்லாத 767 சிறு உணவகங்கள் செயல்பட அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர்.
சென்னை பெருநகர இரண்டாம் முழுமை வளர்ச்சித் திட்ட விதியின் படி, கட்டாய வாகன நிறுத்த வசதி என்ற விதி புதிதாகத் திறக்கப்படும் உணவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
உயர்நீதிமன்ற உத்தரவைத் தவறாகப் புரிந்து கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆகையால், சிறு உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.ராமன், எஸ்.விஜயன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
விரிவான வாதத்துக்குப் பின்னர், வாகன நிறுத்த வசதி இல்லாத உணவகங்களை மூட வேண்டும் என்ற உத்தரவைத் தளர்த்திய நீதிபதிகள், உரிமம் புதுப்பிக்க அனுமதி மறுக்கப்பட்ட 767 உணவகங்களிடம் புதுப்பிப்புக் கட்டணம் பெற்று, உரிமத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுப்பித்து வழங்குமாறு உத்தரவிட்டனர். மேலும், பிரதான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Image courtsy: mathrubhumi english

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com