சுற்றுலா தொழில் பொருள்காட்சிக்கு 6 லட்சம் பேர் வருகை

சென்னையில் நடைபெற்ற சுற்றுலா தொழில் பொருள்காட்சியை, 3 லட்சம் மாணவர்கள் உள்பட மொத்தம் 6 லட்சம் பேர் வரையில் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம், சுற்றுலாத் துறைக்கு ரூ.80 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக, அதிக

சென்னையில் நடைபெற்ற சுற்றுலா தொழில் பொருள்காட்சியை, 3 லட்சம் மாணவர்கள் உள்பட மொத்தம் 6 லட்சம் பேர் வரையில் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம், சுற்றுலாத் துறைக்கு ரூ.80 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

43-ஆவது பொருள்காட்சி: சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் சுற்றுலா தொழில் பொருள்காட்சி பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், 43-வது இந்திய சுற்றுலா தொழில் பொருள்காட்சி கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் பொருள்காட்சியில் அரசு துறைகளின் சார்பில் அரங்குகளும் மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் விரும்பும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.

நாள்தோறும் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஞாயிறு உள்பட விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பொருள்காட்சி செயல்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com