குழந்தைகள் மீது பாலியல் குற்றம் புரிவோரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்: தலைமை நீதிபதி

குழந்தைகள் மீது பாலியல் குற்றம் புரிவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

குழந்தைகள் மீது பாலியல் குற்றம் புரிவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) இணைந்து நடத்தும் ஒருங்கிணைந்த குழந்தைகள் சார்ந்த சட்டங்கள் குறித்த மாநில அளவிலான இரண்டு நாள்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. இதைத் தொடங்கி வைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியது:
இளஞ்சிறார் நீதி சட்டத்தின் கீழ், அக்கறையும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளைப் பாதுகாக்க விதிகள் இருந்தாலும், நமது நாட்டில் இன்றும் நகரங்கள் தோறும் குழந்தைகள் பிச்சை எடுப்பதைக் காண்பது துரதிருஷ்டவசமானது. கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிதல், சிசுக் கொலைகள் இன்றும் தொடர்வது வருத்தமளிக்கிறது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை வலிமையான கரங்கள் கொண்டு ஒடுக்க வேண்டும். கடுமையான தண்டனைகளே குற்றங்களைத் தடுக்கும் என்றார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.மணிகுமார், ராஜீவ் ஷக்தர், மாவட்ட முதன்மை நீதிபதிகள், மகளிர் நீதிமன்ற நீதிபதிகள் என, 32 மாவட்ட இளஞ்சிறார் நீதி குழும முதன்மை நீதிபதிகள், யுனிசெப் இந்தியாவின் குழந்தை பாதுகாப்பு முதன்மை அலுவலர் ஜாவியர் அக்விலர், தமிழ்நாடு மற்றும் கேரள அலுவலக முதன்மை அலுவலர் ஜாப் சக்காரியா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com