நிர்மலா தேஷ்பாண்டே விடுதி பணிக்கு ரூ.19 லட்சம் நன்கொடை

சென்னை சேத்துப்பட்டில் உள்ள நிர்மலா தேஷ்பாண்டே பெண்கள் விடுதிக்கு புதிதாக கூடுதல் கட்டடம் கட்ட நன்கொடையாக இதுவரை ரூ.19 லட்சம் சேர்ந்துள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள நிர்மலா தேஷ்பாண்டே பெண்கள் விடுதிக்கு புதிதாக கூடுதல் கட்டடம் கட்ட நன்கொடையாக இதுவரை ரூ.19 லட்சம் சேர்ந்துள்ளது.
முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் நன்கொடை அளித்துள்ளதாக ஹரிஜன சேவா சங்க தலைவர் எஸ்.பாண்டியன், செயலாளர் பி.மாருதி தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
சென்னை சேத்துப்பட்டில், காந்தியவாதியான நிர்மலா தேஷ்பாண்டே பெயரில் மாணவிகள் விடுதி பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி, கல்லூரி, மாணவிகள் இலவசமாக தங்கி படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு படிக்கும் காலத்திலேயே தொழிற்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விடுதி கட்டப்பட்டு 47 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால், இவ்விடுதிக்கு அருகிலேயே 32 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ரூ.8.06 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதியுடன்கூடிய புதிய விடுதியை, பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டி முடிக்கும் முயற்சியில் ஹரிஜன சேவா சங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஏற்கெனவே, சென்னை கீதாபவன் அறக்கட்டளை அளித்த ரூ.65 லட்சத்தில் முதல் கட்டமாக அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இப்பணியை மேற்கொள்ள ஒருவர் ரூ.1,660 அளித்தாலே போதும்; அத்தொகை ஒரு சதுர அடிக்கான கட்டட பணிக்கு உதவும்.
இதுபோல் 32 ஆயிரம் பேர் நன்கொடை அளித்தாலே போதும்; விடுதிப் பணிகளை எளிதாக முடிக்க முடியும். முன்னாள் மாணவிகள், நன்கொடையாளர்கள் மூலம் இதுவரை ரூ.19 லட்சம் கிடைத்துள்ளது.
இந்த விடுதி பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் - ஏநந கஹக்ண்ங்ள் ஏர்ள்ற்ங்ப் இர்ய்ள்ற்ழ்ன்ஸ்ரீற்ண்ர்ய் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற், யண்த்ஹஹ்ஹ ஆஹய்ந் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற் சர்:303501011002644, யச தர்ஹக், ப.ய்ஹஞ்ஹழ், இட்ங்ய்ய்ஹண்-17 என்ற வங்கிக் கணக்கில் பணமாகவோ அல்லது ஏநந கஏஇ அஇஇஞமசப என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாகவோ, காசோலையாகவோ அளிக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com