நெட், ஸ்லெட் தேர்வுக்கு இலவச பயிற்சி

மத்திய மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் நெட், ஸ்லெட் தேர்வுக்கு சென்னை கிண்டி செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சிக்கு முதுகலை பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் நெட், ஸ்லெட் தேர்வுக்கு சென்னை கிண்டி செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சிக்கு முதுகலை பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
முதுகலை பட்டதாரி இளைஞர்கள் பயனடையும் வகையில் நெட், ஸ்லெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டியில் செயல்படும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் மே.2-ஆம் தேதி இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி தொடங்கவுள்ளது.
இத்தேர்வில் பங்கேற்போர் வயது, கல்விச் சான்று நகல்களுடன் 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையில் ஒரு வேலை நாளில் அணுகி தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு இளைஞர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com