பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று ரயில்கள் வருகையில் தாமதம்

தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் 5 முதல் 10 நிமிடங்கள் வரை கால தாமதமாக எழும்பூர் ரயில் நிலையம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று ரயில்கள் வருகையில் தாமதம்

தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் 5 முதல் 10 நிமிடங்கள் வரை கால தாமதமாக எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் என தெற்கு ரயில்வே
அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் பாதசாரிகள் செல்ல சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை முன்னிட்டு, அந்த மார்க்கத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, ஞாயிற்றுக்கிழமை(ஆக.13) தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் 5 முதல் 10 நிமிடங்கள் வரை கால தாமதமாக எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும். அதன் விவரம்:

ரயில் எண் பெயர்
12654 திருச்சி -சென்னை எழும்பூர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்
16176 காரைக்கால் }சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
12638 மதுரை }சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ்
12662 செங்கோட்டை}சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ்
16102 ராமேஸ்வரம் }சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
12634 கன்னியாகுமரி }சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
12632 திருநெல்வேலி }சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ்
22662 ராமேஸ்வரம் }சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
22624 மதுரை }சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ்
12694 தூத்துக்குடி }சென்னை எழும்பூர் முத்து நகர் எக்ஸ்பிரஸ்
16724 திருவனந்தபுரம்} சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்


ஆகிய ரயில்கள் ஐந்து நிமிடமும், மன்னார்குடி }சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16180), மதுரை }நிஜாமுதின் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் (12651), புதுச்சேரி }சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16116) ஆகிய ரயில்கள் 10 நிமிடமும் தாமதம் ஆகும்.
மேலும் விழுப்புரம் }தாம்பரம் பயணிகள் ரயில் ஒரு மணி 30 நிமிடங்கள் தாமதமாக தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com