இந்தியன் வங்கி 111 -ஆவது நிறுவன தின விழா: 97 ஏடிஎம்.கள்; 11 கிளைகள் திறப்பு

இந்தியன் வங்கியின் 111 -ஆவது நிறுவன தினத்தையொட்டி, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், வங்கியின் சார்பில் 97 ஏடிஎம் மையங்கள், 11 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியன் வங்கியின் 111-ஆவது நிறுவன தினத்தையொட்டி, சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடும் (இடமிருந்து) வங்கியின் செயல் இயக்குநர் ஏ.எஸ்.ராஜீவ், நிர்வாக இயக்குநர் கிஷோர் காரத், த
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியன் வங்கியின் 111-ஆவது நிறுவன தினத்தையொட்டி, சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடும் (இடமிருந்து) வங்கியின் செயல் இயக்குநர் ஏ.எஸ்.ராஜீவ், நிர்வாக இயக்குநர் கிஷோர் காரத், த

இந்தியன் வங்கியின் 111 -ஆவது நிறுவன தினத்தையொட்டி, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், வங்கியின் சார்பில் 97 ஏடிஎம் மையங்கள், 11 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் வகையில் குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் 3 புதிய மண்டலங்கள் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இவற்றை வங்கியின் நிர்வாக இயக்குநர் கிஷோர் காரத் தொடக்கி வைத்துப் பேசியது:
பல தொழில்முனைவோர்களை இந்தியன் வங்கி உருவாக்கியுள்ளது. கோவையில் பல ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியன் வங்கி வாடிக்கையாளர் ஒருவரது கடன் வரம்பு அளவு ரூ.4,000 ஆக இருந்தது. அது தற்போது ரூ.40 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் தொடர் கடனுதவியைப் பெறும் அளவுக்கு அந்த வாடிக்கையாளர் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார்.
வாராக் கடனை குறைக்க முயற்சி: இதேபோன்று, பல வாடிக்கையாளர்களின் முன்னேற்றத்துக்கு வங்கி ஒரு தூண்டுகோலாகச் செயல்பட்டு வருகிறது. வங்கியின் தற்போதைய வர்த்தகம் ரூ. 3.25 லட்சம் கோடியாக உள்ளது. இதை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ரூ. 3.4 லட்சம் கோடியாகவும், டிசம்பர் மாத இறுதிக்குள் ரூ. 3.6 லட்சம் கோடியாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாராக்கடனை படிப்படியாகக் குறைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, இந்தியன் வங்கியின் நீண்டகால வாடிக்கையாளர்களாக இருந்து வரும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, டாக்டர் மோகன் காமேஸ்வரன், பதிப்பாளர் ஆர்.நாராயணசாமி உள்ளிட்ட 11 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவின் முடிவில், வங்கியின் 111 -ஆவது நிறுவன தினத்தையொட்டி அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இதில், இந்தியன் வங்கியின் தலைவர் வெங்கட சுப்பிரமணியம், செயல் இயக்குநர்கள் எம்.கே.பட்டாச்சார்யா, ஏ.எஸ்.ராஜீவ் மற்றும் வாடிக்கையாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com