குப்பை பொறுக்குவதுபோல நோட்டமிட்டு வீடு புகுந்து நகை திருட்டு: 4 பேர் கைது

சென்னை, மண்ணடியில் குப்பை பொறுக்குவதுபோல நோட்டமிட்டு ஆளில்லாத வீட்டில் தங்க நகைகளைத் திருடிச் சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, மண்ணடியில் குப்பை பொறுக்குவதுபோல நோட்டமிட்டு ஆளில்லாத வீட்டில் தங்க நகைகளைத் திருடிச் சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மண்ணடி, மூர் தெருவைச் சேர்ந்தவர் உம்முல் அபிபா (42). இவர் கடந்த 4-ஆம் தேதி காலை வீட்டைப் பூட்டிவிட்டு காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்றார். நண்பகல் வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டில் யாரோ புகுந்து பீரோவில் இருந்த 65 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. அவர் காய்கறி மார்க்கெட்டுக்குச் செல்லும்போது வீட்டு சாவியை, ஜன்னல் அருகே மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இது குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். உம்முல் அபிபா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் கோட்டை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வசித்து வரும் வே. லாரன்ஸ் (22), அவரது கூட்டாளிகள் தா.பாலு (21), சு. ஆகாஷ் (20), ச. அஜித் (20) ஆகிய 4 பேரும் பிடிப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நால்வரும் குப்பை பொறுக்குவதுபோல் அந்த வீட்டை நோட்டமிட்டு திருடியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், பேசின்பாலம் அருகே ரயில்வே தண்டவாளம் அருகே தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 65 சவரன் நகைகளும் போலீஸாரால் மீட்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com