டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் ஜிஎஸ்டி பயிலரங்கம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்த பயிலரங்கம் கடந்த 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்த பயிலரங்கம் கடந்த 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 
இதில் கல்லூரியின் முதல்வர் சந்தானம் பேசும்போது, "வரி என்பது நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது. ஒவ்வொரு குடிமகனும் செலுத்தும் வரி நாட்டின் அனைத்து துறை சார்ந்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருக்கும்' என்றார். 
இதையடுத்து ஜிஎஸ்டியில் உள்ள சாதக - பாதகங்கள் குறித்து,, வணிகவியல் துறை தலைவர் இராம.கணேசன், முதுநிலை தணிக்கையாளர்கள் ஜெ.முரளி, வி.வி.சம்பத்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com