சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மார்ச் 2018- ல் பணிகள் தொடக்கம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதல் கட்டப் பணிகள் 2018 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. 
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மார்ச் 2018- ல் பணிகள் தொடக்கம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதல் கட்டப் பணிகள் 2018 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. 
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 2 வழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கான மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 27 கி.மீ. தூரம் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது மீதமுள்ள இடங்களில் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, அடுத்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் 45 கி.மீ. தூரத்துக்கு முழுமைக்காக மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுவிடும்.
2-ஆவது கட்டப் பணிகள்: இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தில் இரண்டாவது கட்டமாக மாதவரம் முதல் சிறுசேரி, சென்னை புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் என 3 வழித் தடங்களில் 107.55 கி.மீட்டருக்கு ரூ.80,047 கோடிக்கு திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு ஏற்கெனவே தமிழக அரசு அனுப்பியுள்ளது. இத்திட்டத்துக்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவுள்ளது. இதையடுத்து 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் மார்ச் மாதம் தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தேசித்துள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயார்: இந்நிலையில், மேற்கண்ட 3 வழித் தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைப்பது மற்றும் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பான, விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. அதில், எந்த சாலை வழியாக ரயில் பாதை, ரயில் நிலையம் அமைக்க வேண்டும், தேவையான நிலங்கள், ரயில் பாதை அமைக்கும்போது எந்தெந்த கட்டடங்கள் பாதிக்கப்படும், அதற்கான இழப்பீடுத் தொகை, இதில் அரசு நிலம், தனியார் நிலம் எவ்வளவு, போக்குவரத்து மாற்றம் செய்வது எப்படி, எந்த ரயில் நிலையம் சுரங்கப் பாதையில் இருக்கும், எத்தனை ரயில் இயக்க வேண்டும், எத்தனை நிமிடத்துக்கு ஒரு ரயில் என்பது உள்பட அனைத்து விவரங்களும் தயார் நிலையில் உள்ளன.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியது: இந்த வழித் தடத்தில் 104 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள ஐ.டி. நிறுவனங்களை இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறவுள்ளன.
பழைய மகாபலிபுரம் சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான கார்கள், வேன்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாகவும், ஐ.டி. நிறுவன ஊழியர்களைக் கவரும் வகையிலும் இந்த பகுதிக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் பணி நிறைவு: இதில் 22 உயர்நிலை ரயில் நிலையங்களும், 82 சுரங்க ரயில் நிலையங்களும் கட்டப்படவுள்ளன. இந்த ரயில் திட்டப் பணிகள் 10 ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. 
அடுத்த ஆண்டு பணிகள் தொடங்கப்படுவதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 80 சதவீத பணிகள் பூமிக்கடியில் நடைபெற உள்ளன. 18 மீட்டர் (60அடி) ஆழத்தில் இந்த ரயில் வழித் தடம் அமைக்கப்படுகிறது. 14 மீட்டர் ஆழத்தில் ரயில் நிலையங்கள் கட்டப்படுகிறது என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com