ரயில்வே அருங்காட்சியகத்தை வார இறுதி நாள்களில் இரவு 9 மணி வரை காணலாம்!

சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள ரயில்வே அருங்காட்சியகத்தை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம் என்று
ரயில்வே அருங்காட்சியகத்தை வார இறுதி நாள்களில் இரவு 9 மணி வரை காணலாம்!

சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள ரயில்வே அருங்காட்சியகத்தை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம் என்று ஐ.சி.எஃப். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் செல்லும் நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ரயில்வே அருங்காட்சியகத்தைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1853- ஆம் ஆண்டு, முதன் முதலாக மும்பை - தானே இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயிலுக்கும்,  இன்றைய ரயில்களுக்கும் இடையில் ஏற்பட்ட  மாற்றங்களை எல்லாம் காட்சிப்படுத்துவதே இதன் சிறப்புகளில் ஒன்றாகும்.

முதன்முதலாக, தில்லியில்  அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், தெற்கு ரயில்வே துறையின் தலைமையகமான சென்னையில் 2002 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் நிதிஷ் குமாரால்  திறக்கப்பட்டது. 

வில்லிவாக்கத்தில் உள்ள ஐ.சி.எப்  நியூ ஆவடி சாலையில், 6.25 ஏக்கர் பரப்பளவில் இந்த மண்டல ரயில்வே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 
உள் அரங்கம், வெளி அரங்கம் என்னும் இரண்டு கூடங்களைக் கொண்ட இங்கு, 1,800-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை உள்ள பல்வேறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்புகள் மாதிரிகளாகவோ , புகைப் படங்களாகவோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிக்கூடத்தில், சிறுவர் சிறுமியர் விரும்பும் வகையில் பொம்மை ரயில்கள் உள்ளன. சிறுவர்,  சிறுமிகள் பயணம் செய்யும் அந்த ரயிலில், அந்த மைதானத்தை இரண்டு முறை சுற்றி வர பள்ளி மாணவர்களுக்கு ரூ. 25-ம்,  மற்றவர்களுக்கு ரூ. 40 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்திய ரயில்வே துறையின் பல்வேறு பரிணாமத்தை விளக்கும் புகைப்படங்களும் பல்வேறு நாடுகளில் ரயில் பெட்டிகளின் வடிவமைப்பை விளக்கும் சுவரொட்டிகளும் நிறைந்துள்ளன. ஒவ்வொரு மாதமும் சுமார் 7 ஆயிரம் இங்கு வருகை தருகின்றனர்.

மேலும் ஏராளமான மாணவர்கள் வந்துபோகும் இந்த அருங்காட்சியகம்,  வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் பல்வேறு பயனுள்ள தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. 

சென்னை ரயில்வே மண்டல அருங்காட்சியகம் செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் இந்த அருங்காட்சியகத்துக்கு, திங்கள்கிழமைகளில் மட்டும் விடுமுறை. 
மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணி வரை ரயில் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com