வறட்சியை நோக்கி சென்னை ஏரிகள்: வீராணம் தண்ணீரும் நிறுத்தப்பட்டதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

சென்னையில் உள்ள 4 குடிநீர் ஏரிகளிலும் வெறும் 1.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. தற்போது வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் குடிநீர்
வறட்சியை நோக்கி சென்னை ஏரிகள்: வீராணம் தண்ணீரும் நிறுத்தப்பட்டதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

சென்னையில் உள்ள 4 குடிநீர் ஏரிகளிலும் வெறும் 1.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. தற்போது வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது.
சென்னையின் குடிநீர்த் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கும்போது அவ்வப்போது சென்னையின் குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
ஆனால், கடந்த ஆண்டு இரு பருவ மழைகளும் போதிய அளவு பெய்யாததால் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது.
இதனால் சென்னையின் குடிநீர்த் தேவையை சமாளிக்க விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்தல், ஆழ்துளைக் கிணறுகளை அதிகப்படுத்துதல் என குடிநீர் வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள நான்கு ஏரிகளிலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
மொத்தம் 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவுடைய பூண்டி ஏரியில் 842 மில்லியன் கனஅடி தண்ணீரும், 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 41 மில்லியன் கனஅடியும் இருப்பு உள்ளது. அதேபோன்று புழல் ஏரியில் மொத்தக் கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் 577 கனஅடி, 3,645 மில்லியன் கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 208 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி ஆகும். ஆனால் தற்போது நான்கு ஏரிகளிலும் இருக்கும் தண்ணீரைச் சேர்த்து 1,668 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. அதாவது மொத்த கொள்ளளவில் 10 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே தேதியில் 8,367 மில்லியன் கனஅடி நீர் இருந்தது.
450 மில்லியன் லிட்டர் மட்டுமே....:
சென்னை நகருக்கு தினமும் 834 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தற்போது 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் தான் வினியோகிக்கப்படுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் பல பகுதிகளில் தண்ணீர் விடப்படுகிறது.
இதனால் மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு திறந்து விடப்பட்ட 10 கன அடி தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் அதன் மூலம் கிடைத்து வந்த 150 மில்லியன் லிட்டர் குடிநீர் தற்போது பற்றாக்குறையாக உள்ளது. இதனால் இன்னும் சில வாரங்களில் சென்னையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து குடிநீர் வாரியம், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டதால் அங்கிருந்து சென்னைக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏரிகளில் 10 சதவீத அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தாலும் அதைக் கொண்டு அதிகபட்சம் 10 வாரங்கள் வரை மட்டுமே பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும்.
வீராணம் ஏரிக்கு பதிலாக புழல் ஏரியிலிருந்து வழக்கத்தைக் காட்டிலும் சற்று அதிகளவு தண்ணீரை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் தண்ணீரை பெற்று நிலைமையைச் சமாளிக்க முயற்சி மேற்கொள்வோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com