போராட்டத்தில் தமிழக இளைஞர்கள்: பிரசாரத்தில் வெளிநாடுவாழ் தமிழர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு ஆதரவான பிரசாரத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மெரீனா கடற்கரையில் ஒளி வெள்ளத்தில் சனிக்கிழமை இரவு போராட்டத்தில் குவிந்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள்.
மெரீனா கடற்கரையில் ஒளி வெள்ளத்தில் சனிக்கிழமை இரவு போராட்டத்தில் குவிந்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு ஆதரவான பிரசாரத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கு முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்யப்பட்டுவரும் பிரசாரமே காரணம்.
மெரீனா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தை 136 பேர் கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் 12 குழுக்களாக ஒருங்கிணைத்து வரும் நிலையில், அவர்கள் மூலமாகவே வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சமூக ஊடகங்களில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரிமாறப்படும் தகவல்கள்: மெரீனா கடற்கரையில் நடைபெறும் போராட்டங்கள், நிகழ்ச்சிகள், போராட்டத்தின் உணர்ச்சிகரமான நேரங்கள் ஆகியவற்றை புகைப்படங்களாகவும், தகவல்களாகவும், விடியோ காட்சிகளாகவும் போராட்டக் குழுவினர் வெளிநாடுகளில் வசிக்கும் போராட்டக் குழுவினரோடு தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் சமூக ஊடகங்களில் பரப்பி தொடர் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுதவிர, போராட்டத்தை பற்றி எதிர்மறையான தகவல்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகிறதா என்பதையும் இவர்கள் கண்காணிக்கின்றனர். அதோடு, போராட்டத்தை பற்றி நல்ல தகவல்கள் மட்டுமே உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களுக்கு சென்றடையும் வகையில் பார்த்துக் கொள்கின்றனர்.
தமிழர்களை சமூக ஊடகங்கள் ஒன்றிணைத்து, அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி மிகப் பெரும் மாற்றத்துக்கு வித்திட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மெரீனா போராட்டத் துளிகள்....

* அரசியல் கட்சி கொடி கட்டி வந்த வாகனங்களை மறித்து, கொடிகளை போராட்டக்
குழுவினர் அகற்றினர்.
* பிரபலமான கேட்டரிங் நிறுவனங்கள் இலவசமாக உணவு விநியோகம் செய்தன.
* திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க போலீஸôர் மாறுவேடத்தில் ரோந்து வந்தனர்.
* போராட்டத்தில் பங்கேற்ற ஒரு கல்லூரி மாணவ, மாணவிகள் அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
* போராட்டத்தின் காரணமாக தென் சென்னை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
* காமராஜர் சாலையில் போக்குவரத்தை சீர் செய்வதற்கு தன்னார்வலர்கள் கடுமையாக
போராடினர்.
* போராட்டம் நடைபெற்ற பகுதியில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படவில்லை.
* மாலையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு பேசினார்.
* பாதுகாப்பு பணிக்காக காவல்துறை அதிகாரிகள், விவேகானந்தர் இல்லத்தில்
முகாமிட்டிருந்தனர்.
* காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து இளைஞர்களும், இளம் பெண்களும்
ஏராளமாக வந்திருந்தனர்.

மெரீனா கடற்கரையில் ஒளி வெள்ளத்தில் சனிக்கிழமை இரவு போராட்டத்தில் குவிந்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com