சென்னை கல்லூரிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: தா.கார்த்திகேயன் அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தகுதி வாய்ந்த இளம் வாக்காளர்களை (வயது 18 முதல் 21 வரை) வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு, இந்த ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சிறப்பு முனைப்புத் திட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்தச் சிறப்பு முனைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள இளம் வாக்காளர்களைக் கவரும் வகையில் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் தாங்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரைப் பதிவு செய்யவில்லையெனில், தங்களுடைய பெயரை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அந்தந்த கல்லூரி ஒருங்கிணைப்பாளரிடமோ அல்லது கல்லூரி தூதர்களிடமோ தெரிவித்து நடைபெறும் முகாமில் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாணவர்களில் சிலர் வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கெனவே பெற்றிருந்தால், அதன் விவரத்தையும் கல்லூரி தூதர்களிடம் தெரிவிக்க வேண்டும் என தா.கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com