சென்னையில் ஜூலை 21 முதல் 31 வரை புத்தகத் திருவிழா

சென்னை புத்தகத் திருவிழா ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை புத்தகத் திருவிழா ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் 'சென்னை புத்தகத் திருவிழா 2017 ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ' நடைபெற உள்ளது.
சென்னை வாசிக்கிறது : புத்தகத் திருவிழாவுக்கு முன்னோட்டமாக ஜூலை 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் காலை 10 மணிக்கு 3,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இணைந்து பங்கேற்கும் ' சென்னை வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் பல்வேறு கல்வி நிலையங்களின் மாணவர்கள், ஆஸ்திரேலியா நாட்டுக் குழந்தை எழுத்தாளர் டிம்முரே, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஜூலை 20-ஆம் தேதி 'ஆணியாய் அறையப்படும் கல்வியை விதைகளாய் தூவுவது எப்படி' என்ற தலைப்பில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் அமைச்சர்கள் : புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா ஜூலை 21-ம் தேதி காலை 10 மணியளவில் நடை பெற உள்ளது. இதில், நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளனர்.
250-க்கும் மேற்பட்ட அரங்குகள் : இதில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக்கணக்கான புத்தகங்களை பார்வைக்கு வைக்க உள்ளனர். வார நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். இந்தப் புத்தகக் கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம்.
ஸ்ரீராமானுஜர் கருத்தரங்கம் : இந்த புத்தகத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் இலக்கிய நிகழ்வுகளாக கவிதை வாசித்தல், ராமானுஜர் 1000-ஆவது ஆண்டு சிறப்பு கருத்தரங்கம், சினிமா 100-ஐ சிறப்பிக்கும் சினிமாத் துறை பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு, மார்க்ஸ் 200-ஐ சிறப்பிக்கும் கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
வாசகர்களுக்குப் பரிசுகள்: குலுக்கல் முறையில் தினந்தோறும் வாசகர்களுக்கு நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன. சென்னை குறித்த பிரத்யேக புகைப்படக் கண்காட்சியும் நடை பெற உள்ளது. வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத கழிவு அளிக்கப்படும். வாசகர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி புத்தகங்களை வாங்குவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com