ராயப்பேட்டையில் இன்று முதல் புத்தகத் திருவிழா

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 21) தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது என்று தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல்
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அரங்குகளில் புத்தகங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அரங்குகளில் புத்தகங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 21) தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது என்று தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டு நிறுவன அறங்காவலர் சண்முகம் தெரிவித்தார்.
250-க்கும் மேற்பட்ட அரங்குகள்: 250-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளில் 200 பதிப்பகங்களின் புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறவுள்ளன. புத்தக பதிப்பகத்தார் கலந்து கொள்வதால் போட்டித் தேர்வுக்கு தயார் செய்வோர், சில தலைப்புகள் குறித்து அறிந்து கொள்ள புத்தகங்களைத் தேடுவோர் பயன்பெறும் வகையில் அமையும்.
நாள்தோறும் கருத்தரங்கம்: புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் கவிதைகள் வாசிப்பு, இராமனுஜர் 1000-த்தை சிறப்பித்தல், சினிமா மற்றும் மார்க்ஸ் பற்றிய கருத்தரங்கங்களும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த புத்தகத் திருவிழா ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை நடைபெறும் . வார இறுதி நாள்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்...: இந்தப் புத்தகத் திருவிழாவை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) தொடங்கி வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com