சென்னையில் நாளை கவிக்கோ நினைவேந்தல்

மறைந்த கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை (ஜூலை 24) நடைபெறவுள்ளது.

மறைந்த கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை (ஜூலை 24) நடைபெறவுள்ளது.
தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த நினைவேந்தலுக்கு இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
முதல் அமர்வு: பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் முதல் அமர்வுக்கு பேராசிரியர் முனைவர் தி.மு.அப்துல் காதர் தலைமை வகிக்கிறார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் வரவேற்கிறார். பேராசிரியர் ஹாஜா கனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த அமர்வில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், கவிஞர்கள் முத்துலிங்கம், சிற்பி பாலசுப்பிரமணியம், வே.பதுமனார், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, அறிவுமதி, பழநிபாரதி, யுகபாரதி, ஜெயபாஸ்கரன், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
இரண்டாம் அமர்வு: மாலை 6.30 மணிக்குத் தொடங்கும் இரண்டாம் அமர்வுக்கு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் சேமுமு முகமதலி தலைமை வகிக்கிறார். பொதுச் செயலாளர் மு.அப்துல் சமது வரவேற்கிறார். ஆளூர் ஷாநவாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன் என்.ஏ.அமீர் அலி, ரஹ்மத் பதிப்பகத்தின் தலைவர் எம்.ஏ. முஸ்தபா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பேராசிரியர் அருணன், மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சித் தலைவர் தெஹ்லான் பாகவி, முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், பாத்திமா முஸப்பர் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
இஸ்லாமிய இலக்கிய கழகப் பொருளாளர் எஸ்.எஸ்.ஷாஜஹான் நன்றி கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com