புரட்சித்தலைவி அம்மா அணி சென்னையில் ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணித் தலைவர்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணித் தலைவர்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி இந்த அணியில் இருந்து விலகி, முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அம்மாஅணியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.
இந்நிலையில் புரட்சித் தலைவி அம்மா அணித் தலைவர்கள் சென்னையில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகல் மற்றும் அ.தி.மு.க அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சமீபத்தில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்துப் பேசினார். அ.தி.மு.க அணிகள் இணைப்புத் தொடர்பாகப் பேசியதாக அப்போது அவர் கூறினார்.
அடுத்த சில நாள்களில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து விட்டார்.
இந்நிலையில்தான் ஓ. பன்னீர் செல்வம் ஞாயிற்றுக்கிழமை கிரீன்வேஸ் சாலை உள்ள தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com