விவசாயிகள் பிரச்னை: அய்யாக்கண்ணு மீண்டும் போராட்டம்

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வெள்ளிக்கிழமை (ஜூன் 9) போராட்டத்தைத்
சென்னை சேப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசும் அய்யாக்கண்ணு.
சென்னை சேப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசும் அய்யாக்கண்ணு.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வெள்ளிக்கிழமை (ஜூன் 9) போராட்டத்தைத் தொடங்கினார்.
சென்னையில் 32 நாள்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அய்யாக்கண்ணு கூறியது:
விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு...கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.8,450 கோடி வரை உள்ளது. அதனை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாத ஓய்வூதியம் தேவை: 60 வயது அடைந்த அனைத்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5,000 வழங்க வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளில் வேளாண் நகை கடனுக்காக, விவசாயிகள் வைத்துள்ள நகைகளை வங்கிகள் ஏலம் விடுவதை தடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் - மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை... இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை 32 மாவட்ட விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஜூலை 10 -ஆம் தேதி வரை...ஒவ்வொரு மாவட்டத்தினராக சென்னைக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஜூலை 10 -ஆம் தேதி வரை 32 நாள்கள் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.
காவல் துறை அனுமதி இல்லை: சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையிடம் ஒரு நாளுக்கு மட்டும் விவசாயிகள் அனுமதி கேட்டுப் பெற்றுள்ளனர். இதனால் மாலை 5 மணிக்கு மேல் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு அய்யாக்கண்ணுவைக் காவல்துறையினர் வலியுறுத்தினர். ஆனால், காவல் துறை உத்தரவை மீறி அவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக விவசாயிகள் ஏற்கெனவே தில்லியில் நடத்திய தொடர் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com