வேளாண் தகவல் மையம்: ஜூன் 23-இல் மசாலா பொடிகள் உற்பத்தி செய்யும் பயிற்சி

வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் ஜூன் 23 இல் மசாலா பொடிகள் உற்பத்தி செய்யும் முறை குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் ஜூன் 23 இல் மசாலா பொடிகள் உற்பத்தி செய்யும் முறை குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்த விவரம்: மசாலா பொடிகள் உற்பத்தி செய்யும் முறை குறித்த ஒருநாள் பயிற்சி ஜூன் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் சாம்பார் பொடி, ரசப்பொடி, கரம் மசாலா, தேங்காய் பொடி, கறிவேப்பிலை பொடி, எள்ளுப்பொடி, சிக்கன், மீன் மசாலாப் பொடிகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யும் முறை குறித்து கற்றுத்தரப்படவுள்ளன.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன் பதிவு செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com