சென்னை சில்க்ஸ் கட்டடம்: 2 பாதுகாப்புப் பெட்டகங்கள் மீட்பு

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள 2 பாதுகாப்பு பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயநகரில் சென்னை சில்க்ஸ்  கட்டடத்தின்  இடிபாடுகளில் கிடந்த  பாதுகாப்புப் பெட்டகம். (வட்டமிடப்பட்டுள்ளது)

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் செவ்வாய்க்கிழமை மாலை முழுவதுமாக இடிக்கப்பட்டது. கட்டட இடிபாடுகளுக்குள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகங்கள் சிக்கியிருந்தன. 2-ஆவது நாளாக வியாழக்கிழமை கட்டடக் கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. அதில் 2 பாதுகாப்புப் பெட்டகங்கள் மீட்கப்பட்டன.
ஒரு பெட்டகம் வருவாய்த் துறையினர், போலீஸார் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில், கருகிய நிலையில் பத்திரங்கள் இருந்தன. இதையடுத்து, மற்றொரு பெட்டகத்தில் 400 கிலோ தங்க நகைகளும், 2 ஆயிரம் கிலோ வெள்ளியும் இருப்பதாகத் தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ. 20 கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது. அந்தப் பெட்டகம் இன்னும் திறக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com